கோவை மாநகராட்சி நீலிக்கோணம்பாளையம் சின்ன தோட்டம் 1-வது வீதியில் சிமெண்டு சாலை உள்ளது. இந்த சாலை அமைத்து, பல ஆண்டுகள் கடந்து விட்டதால், மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் வயதானவர்கள், மாணவ-மாணவிகள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.