சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-05-17 11:43 GMT
தர்மபுரி நகரில் அதிக வாகன போக்குவரத்துக் கொண்ட பகுதிகளில் ஒன்றாக வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் உள்ளது. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரெயில்வே கேட் பகுதியில் தார்சாலை சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியை வாகனங்களில் கடப்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இதை கருத்தில் கொண்டு இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணேஷ்குமார், தர்மபுரி.

மேலும் செய்திகள்