சாலையில் பள்ளம்

Update: 2022-07-22 14:38 GMT

கோவை மாநகராட்சி 54-வது வார்டு பச்சாபாளைய தோட்டம் பகுதியில் உள்ள சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. அந்த பள்ளத்தில் மழைநீரும், கழிவுநீரும் தேங்கி இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்