நடுரோட்டில் குழி

Update: 2023-05-17 09:29 GMT

கோவை சவுரிபாளையம் பிரிவு சுஜினி மில்ஸ் சந்திப்பில் நடுரோட்டில் குழி ஏற்பட்டு உள்ளது. இதை மறைக்க மரக்கிளையை போட்டு வைத்துள்ளனர். இதனால் அந்த வழியே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் இரவில் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த சாலையில் ஏற்பட்டு உள்ள குழியை மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்