ஊட்டி படகு இல்லத்திற்கு செல்லும் நடைபாதை இடிந்து சேதம் அடைந்து உள்ளது. மேலும் அதில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் நிலைதடுமாறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. மேலும் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் காணப்படுகிறது. எனவே ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன்பு, படகு இல்லத்திற்கு செல்லும் நடைபாதையை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.