திண்டிவனம் தாலுகா சஞ்சீவிராயன்பேட்டை 2-வது தெருவில் உள்ள 4 முனை சந்திப்பு மிகவும் குறுகலாக இருக்கிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே சாலையை விரிவுபடுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.