நாகை மாவட்டம் திட்டச்சேரியை அடுத்த கொந்தகை பகுதி சாலை முறையான பராமரிப்பின்றி உள்ளது. இதன்காரணமாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் அந்த சாலை வழியாக சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து தர வேண்டும்