திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ரெயில்வே கேட் பகுதி சாலை குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். போக்குவரத்து முக்கியத்துவம் பெற்ற சாலை பராமரிப்பின்றி இருப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.