தர்மபுரி-சேலம் சாலையில் பாரதிபுரம் அருகே அன்னசாகரத்துக்கு செல்லும் சாலை பிரிகிறது. இந்த இணைப்பு சாலையில் சில இடங்களில் தார்சாலையாகவும், சில இடங்களில் மண் சாலையாகவும் காணப்படுகிறது. பாரதிபுரம், இலக்கியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். எனவே இந்த சாலையை முறையாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?