ராமநாதபுரம் மாவட்டம் செல்லூர் ஊராட்சி முத்துராமலிங்கபுரம் பகுதியில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் மழைநீரானது குளம்போல் தேங்கி நிற்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.