திண்டிவனத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் தாதாபுரம் கூட்டுரோடு உள்ளது. அங்கிருந்து தாதாபுரம், கீழ் மலையனூர், ஆதனூர், கொடியம், சத்தியவாடி போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலை மிகவும் குறுகிய நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் 4 சக்கர வாகன ஓட்டிகள் கடும் நெரிசலில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க சாலையை விரிவுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.