தர்மபுரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குண்டல்பட்டி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பகுதியில் தார் சாலையின் ஓரங்களில் மணல் படிந்து காணப்படுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோர், இந்த மணலில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சாலையோரம் படியும் இந்த மணலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.