கிடப்பில் போடப்பட்ட பாலம் கட்டுமான பணி

Update: 2023-05-07 15:26 GMT
பழனி அருகே உள்ள பாப்பம்பட்டியில் கொழுமம் சாலை சந்திப்பில் பாலம் கட்டுமான பணி கடந்த பல மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்காக முதற்கட்டமாக அங்கிருந்த பழைய பாலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் அங்கு கட்டுமான பணிகள் தொடங்கின. குறிப்பாக பாலம் கட்டுவதற்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் தோண்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் எவ்வித பணிகளும் முறையாக மேற்கொள்ளாததால் அந்த வழியே செல்லும் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலம் கட்டுமான பணியை தொடங்க வேண்டும்.

மேலும் செய்திகள்