நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் மருங்கூர் வேலங்குடி சாலை உள்ளது.இந்த சாலை முறையான பராமரிப்பின்றி ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும்