கோவில்பட்டி புதுரோடு செல்லப்பாண்டியன் தெருவில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக ஹாலோபிளாக் கற்கள் தோண்டி எடுக்கப்பட்டது. ஆனால், குழாய் பதிக்கும் பணி முடிந்த பிறகு அந்த கற்களை முறையாக மீண்டும் பதிக்கும் பணி நடைபெறவில்லை. இதனால் சாலையில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு அதில் தண்ணீர் தேங்குகிறது. இதன் காரணமாக கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.