தஞ்சையை அடுத்த வல்லம் பகுதி பெரியார் நகர்,சவேரியார் கோவில் தெரு, ரெட்டிபாளையம் பிள்ளையார் கோவில் தெரு,அகிலாங்கரை தெருக்களில் சாலைகள் குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. சாலை சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.