கோவை காமராஜர் சாலையில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் வழியில் தியேட்டர் எதிரே குடிநீர் குழாய் உடைப்புக்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்ட பிறகும், பள்ளம் சரிவர மூடப்படாமல் கிடக்கிறது. அங்கு விபத்து ஏற்படுவதை தடுக்க இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளத்தை மூட அதிகாரிகள் முன்வருவார்களா?