குண்டும், குழியுமான சாலை

Update: 2023-05-07 09:20 GMT

ஊட்டி தாவரவியல் பூங்காவின் மேல்பகுதியில் தோடர்மந்து கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து போலீஸ் சூப்பிரண்டு முகாம் அலுவலகம் வழியாக ஊட்டிக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் முதியவர்கள், சிறுவர்கள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.,

மேலும் செய்திகள்

சாலை பழுது