வேப்பூர் தாலுகா நல்லூர் ஒன்றியம் மேமாத்தூர் ரயில்வே காலனியில் பிஞ்சனூர் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையை சீரமைத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், ஜல்லி கற்கள் முழுவதும் பெயர்ந்து, படுமோசமாக மாறிவிட்டது. இதனால் சாலையை கடந்து செல்வதே வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?