வெள்ளிச்சந்தை ஊராட்சிக்கு உட்பட்ட சேனாப்பள்ளி திருப்பத்தில் இருந்து வேம்பனூருக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் இருபக்கமும் 200 மீட்டர் தூரம் பாசன வாய்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை மிகவும் குறுகியதாக காணப்படுவதால் வாகன போக்குரவத்துக்கு நெருக்கடி ஏற்படுவதுடன் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, போக்குவரத்து நெருங்கடியை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.தேவதாஸ், ராமநாதபுரம்.