சீரமைக்க வேண்டிய சாலை

Update: 2023-05-03 11:58 GMT
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நுழைவுவாயில் அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் முன் பகுதியில் அமைந்துள்ள கான்கிரீட் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிலாப்புகள் சேதமடைந்து காணப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கானோர் பஸ்சுக்காக காத்திருக்கும் இந்த பகுதியில் சாலை சேதம் அடைந்திருப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக இரவு நேரத்தில் இந்த பகுதிக்கு வந்து செல்வோர் தடுமாறி கீழே விழும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கிறது. எனவே விபத்து அபாயத்தை தடுக்க இந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்