கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட நல்லாம்பாளையம், தயிர் இட்டேரி, காந்திஜீ சாலையில் இருந்து சபரிகார்டன், மனீஸ் நகர், கண்ணப்பநகர், சங்கனூர் சாலை வரை போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த சாலையை குடிநீர் குழாய் பதிக்க தோண்டினர். ஆனால் சரியாக மூடாமல் விட்டு சென்றுவிட்டனர். இதனால் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் மழை பெய்தால் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. எனவே சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.