வேகத்தடையால் விபத்து

Update: 2023-04-30 16:22 GMT

உத்தமபாளையத்தில் இருந்து கோம்பை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் நடந்தது. அப்போது 10 இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. ஆனால் வேகத்தடை பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் மற்றும் வேகத்தடை இருக்கும் இடத்தை குறிக்கும் விதமாக எந்த ஒரு குறியீடும் இல்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏற்படுவதை தடுக்க வேகத்தடை பகுதியில் குறியீடு மற்றும் இரவில் ஒளிரும் பட்டைகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்