திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே, லெட்சுமாங்குடியில் உத்திராபதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே கடைவீதி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர். மேலும், பள்ளி மாணவர்கள், அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வோர் என பலர் இந்த சாலையை கடந்து தான் சென்று வருகின்றனர். இதனால் இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருந்து வருகிறது. இந்த சாலையில் வேகத்தடை இல்லை. இதன்காரணமாக, வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் நலன்கருதி சாலையில் வேகத்தடை அமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.