திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் எடப்பாளையம் பாலாஜி கார்டன் புறப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள கிராமத்தில் பல வருடங்களாக சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. சாலை சேதமடைந்திருப்பதுடன் குண்டும் குழியுமாகவும் காட்சி தருகிறது. இந்த சாலைகள் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளை சீரமைத்து தர வேண்டும்.