குனியமுத்தூர்-பாலக்காடு சாலை, கோவைப்புதூர் பிரிவில் இருந்து பேரூர் செல்லும் சாலை, கோவைப்புதூரில் உள்ள பல சாலைகள் குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் சிலர் சாலையில் குழிகள் இருப்பது தெரியாமல், இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.