சாலையில் பள்ளம்

Update: 2023-04-26 13:54 GMT

கரூர் மாவட்டம் புன்னம்சத்திரத்தில் இருந்து வேலாயுதம்பாளையம் செல்லும் வழியில் பொன்னியாகவுண்டன்புதூர் முதல் அதியமான்கோட்டை பிரிவு வரை 3 இடங்களிலும், அதேபோல் கரூர் செல்லும் வழியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பும் சாலையின் இடது பக்கம் தார் கலவை பெயர்ந்து குழிகள் ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் இந்த குழியில் இறங்குவதை தவிர்க்க வலது பக்கமாகவே ஒதுங்கி செல்கின்றனர். அதன்காரணமாக எதிர்திசையில் வரும் வாகனங்களில் மோதி விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எதிரே கனரக வகனங்கள் வரும்போது மேடு பள்ளமாக சீரற்று உள்ள இந்த குழிகளில் இறங்கி செல்கின்றனர். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்