தடுப்பு சுவர் அமைக்கப்படுமா?

Update: 2023-04-23 16:20 GMT

சேலம் தாரமங்கலம் - கே.ஆர். தோப்பூர் மெயின் ரோட்டில் அணைமேடு பகுதியில் சாலை புதுப்பிக்கும் பணி நடந்தது. அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் முன்பு சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர் அகற்றப்பட்டது. அந்த பகுதியில் தற்போது ரோடு புதுப்பிக்கும் பணி முடிவடைந்து விட்டது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த பகுதியில் மீண்டும் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்