திருவாரூரை அடுத்த விளாகம் பகுதியில் உள்ள கும்பகோணம் சாலையின் நடுவே ஒரு பகுதியில் பள்ளம் ஏற்பட்டிருந்தது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வந்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி' புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மேற்கண்ட சாலையில் இருந்த பள்ளம் மூடப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்தனர்.