நாகை மாவட்டம் திட்டச்சேரியை அடுத்த பொதக்குடி-நெய்குன்னம் இணைப்பு சாலை பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் அந்த சாலை வழியாக வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். மேலும், மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.