காட்டுமன்னார்கோவில் அருகே கண்டமங்கலம்-வீரானந்தபுரம் மெயின்ரோடு வரை உள்ள சாலை பலத்த சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு இந்த சாலையை கடந்து செல்வதே பெரும் சவாலாக உள்ளது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி விபத்தை சந்திக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.