பழனி அருகே உள்ள கோதைமங்கலம் கிராமத்தில் இருந்து பெரியாவுடையார் கோவிலுக்கு செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. இங்கு பிரதோஷம் மற்றும் விசேஷ நாட்களில் பழனி சுற்றுவட்டார பகுதி சேர்ந்த மக்கள் வந்து செல்கின்றனர். சாலை சேதத்தால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு இடையே சென்று வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.