ஊட்டி நகரில் ஐ பவுண்டேஷன் பகுதியில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. கோடை சீசன் தொடங்கி இருப்பதால், அந்த வழியாக வரும் சுற்றுலா பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே அங்குள்ள பழுதடைந்த சாலைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.