கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் இருந்து பரமத்தி வேலூர் செல்லும் சாலையில் பாலத்துறை உள்ளது. இதன் வழியாக புகழூர் வாய்க்கால் செல்கிறது. புகழூர் வாய்க்கால் பாலத்திற்கு அருகே உள்ள வெற்றிலை கடைக்கு எதிரே தார் சாலையின் குறுக்கே குழாய் போடப்பட்டது. அதிக வாகனங்கள் இந்த தார் சாலை வழியாக செல்வதால் குழாய் போடப்பட்ட பகுதியின்மேலே சிறியதாக நெடுவிலும் பள்ளம் ஏற்பட்டது. தற்போது அந்த பள்ளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் இரவு நேரத்தில் கீழே விழுந்து செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.