தர்மபுரி- சேலம் சாலையில் 4 ரோடு முதல் ஒட்டப்பட்டி வரை 6 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் நடுவே உள்ள தடுப்புகளில்் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மின்விளக்குகள் இரவு நேரங்களில் சில இடங்களில் முறையாக எரியாமல் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இரவு நேரத்தில் இந்த சாலையில் மின்விளக்குகள் முழுமையாக எரிய சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.