பெங்களூரு ஜெயநகர் 4-வது கிராஸ் சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. அந்த நடைபாதையில் மின் இணைப்பு பெட்டி ஒன்று உள்ளது. அந்த பெட்டியால் பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் மழை காலங்களில் மின்சாரம் தாக்கி அவர்கள் உயிரிழக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே பெஸ்காம் அதிகாரிகள் அந்த மின் இணைப்பு பெட்டியை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.