சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட காடம்பாடி கிராமத்தில் இருந்து குமாரபாளையம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் சாலை மேலும் மோசமாகிவிடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே பழுதடைந்த அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.