ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் தேவிப்பட்டினம் முதல் திருப்பாலைக்குடி வரை உள்ள சாலையின் இருபுறமும் கருவேல மரங்களும், முட்செட்செடிகளும் வளர்ந்து உள்ளன. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அடிக்கடி காயம் ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாலையில் இருபுறமும் உள்ள கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..