சாலையை சீரமைக்கவேண்டும்

Update: 2023-04-02 12:38 GMT

நாகையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலை கோட்டை வாசல்படி மின்துறை அலுவலகம் அருகே சாலை பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் சாலை குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்