கொட்டாரத்தில் இருந்து அகஸ்தீஸ்வரம் செல்லும் பிரதான சாலையில் வடுகன்பற்று பகுதியில் இருந்து சாமிதோப்புக்கு செல்லும் பிரிவுச்சாலை செல்கிறது. இந்த சாலையின் வலது பகுதியில் கவர் குளத்தின் கரையோரமாக உலோகத்தால் ஆன பாதுகாப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த பகுதியில் சாலை மிக குறுகலாக காணப்படுகிறது. இதனால், கனரக வாகனங்கள் ஒரே நேரத்தில் எதிர் திசையில் வரும்போது விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, விபத்துகள் ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் சாலையை விரிவாகம் செய்ய வேண்டும்.