சேதமடைந்த புதிய சாலை

Update: 2023-03-30 05:53 GMT
பெங்களூரு எலகங்கா பகுதியில் அனந்தபுரா சாலையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. பல நாட்களாக நடைபெற்ற அந்த பணிகள் கடந்த வாரம் நிறைவடைந்தது. ஆனால் தற்போது அந்த சாலையின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு அந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்