பழனி அருகே மானூரில் இருந்து பெரியாவுடையார் கோவிலுக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.