சுகாதார சீர்கேடு

Update: 2023-03-29 13:19 GMT
தர்மபுரி விளையாட்டு மைதானத்தை ஒட்டி பிடமனேரி சாலை அமைந்துள்ளது. இந்த சாலையின் தெற்கு பகுதியில் நெசவாளர் காலனிக்கு செல்லும் சிறிய இணைப்பு பாதை அமைந்துள்ளது. இந்த பாதையை தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்துகிறார்கள். மழை பெய்யும் போது இந்த பாதையில் மழை நீரோடு கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு மழைநீர் தேங்கும் நேரங்களில் இந்த பாதையை பொதுமக்களால் பயன்படுத்த முடிவதில்லை. இந்த பாதையில் மழை நீரோடு கழிவுநீர் கலந்து தேங்குவதை தடுக்க உரிய வடிகால் வசதியை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.
-வேலாயுதம், தர்மபுரி.

மேலும் செய்திகள்