கோத்தகிரி அருகே உள்ள பில்லிகம்பை கிராமத்திற்கு செல்லும் தார்சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மழைக்காலங்களில் சாலை மேலும் மோசமாகிவிடுகிறது. எவே அந்த சாலையை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.