விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2023-03-26 17:21 GMT
விபத்து ஏற்படும் அபாயம்
  • whatsapp icon
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியிலிருந்து பழனி ரோடு கன்னிவாடி செல்லும் நெடுஞ்சாலையில் ஆத்தூர் பிரிவு அருகே இருவழி சாலையை நான்கு வழி சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. சாலையில் வாகனங்கள் செல்வதால் புழுதி பறக்கிறது. இதனால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியவில்லை. அந்த சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலை அமைக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் சாலையில் தண்ணீர் ஊற்றி புழுதி பறக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினர் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி