சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-07-21 10:53 GMT

முளகுமூட்டில் இருந்து பூவன்கோடுக்கு  செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் சுமார் 6 கிலோமீட்டர் தூரம் சேதமடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்து தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேந்திரன், பூவன்கோடு.

மேலும் செய்திகள்