கோவை கவுண்டம்பாளையம் புது மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலையில் மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்படாமல் இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இதனால் சாலையின் நடுவில் மின்கம்பங்கள் இருக்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.