கரடு,முரடான சாலை

Update: 2023-03-26 11:01 GMT

நாகை நகர் நீலாதெற்கு வீதி பகுதியில் உள்ள சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடு,முரடாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் நடந்து சென்று வருகின்றனர். வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகின்றனர். மழைக்காலங்களில் சாலை முற்றிலும் போக்குவரத்துக்கு பயன்பாடற்ற வகையில் மாறிவிடுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்