தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் துவரங்குறிச்சி - அணைக்காடு நசுவினி ஆத்துப்பாலம் அருகே சாலையோரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தடுப்புகள் தற்போது சேதமடைந்து உடைந்த நிலையில் காட்சி அளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சாலையில் பயணம் செய்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையோர தடுப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?