ஊட்டி மார்க்கெட்டில் இருந்து பஸ் நிலையம் செல்லும் லோயர் பஜார் சாலையில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இருபுறமும் வாகனங்கள் நிறுத்துபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும்.